புதுக்குடியிருப்பில் எவ்வித எரிபொருளும் இல்லை

265 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டிசலுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. வாகன ஓட்டிகள் டீசலை பெற்றுக்கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த  23ஆம் திகதி தொடக்கம் இன்று வரையும் எதுவித எரிபொருள்களும் இல்லாத நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் செல்ல முடியாதவாறு கயிறு கொண்டு இழுத்துக் கட்டப்பட்டுள்ளது.

மண்ணெண்ணைய், பெற்றோல் மற்றும் டிசல் அனைத்தும் தீர்ந்துள்ள நிலையில் எப்போது வரும் என்று தெரியா நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக செல்லும் வாகனங்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றன