உக்ரைன் மீது ரஷியா 32-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷிய தாக்குதலில் இழந்த நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர உக்ரைன் படைகள் முயற்சித்து வருகின்றன.
05.45: ரஷிய அதிபர் புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது எனக்கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்துக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ரஷிய அதிபரை ஜோ பைடன் முடிவுசெய்யக்கூடாது. ரஷிய மக்கள்தான் அந்நாட்டு அதிபரை தேர்வு செய்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
03.15: போலந்து தலைநகர் வார்சாவில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, ரஷிய அதிபர் புதின் ஒரு போர்க் குற்றவாளி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
01.30: போலந்து நாட்டின் எல்லையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லீவ் நகரில் ரஷிய படையினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
00.10: கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வரும் உக்ரைன் – ரஷியா இடையிலான போரில் இதுவரை 7 மூத்த ரஷிய ராணுவ தலைமை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என அந்நகர மேயர் அறிவித்தார்.

