நாடாளுமன்ற உணவகத்தில் ஜீவன் தொண்டமானை திட்டிய அரசின் முக்கியஸ்தர்கள்

234 0

ஜனாதிபதி கூட்டிய சர்வக் கட்சி மாநாட்டை புறக்கணித்தமை தொடர்பாக அரசாங்கத்தின் இரண்டு முக்கியஸ்தர்கள், ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானை திட்டியுள்ளதாக தெரியவருகிறது.

நாடாளுமன்ற உணவகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதுடன் இதில் அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்து கொண்டு, சர்வக் கட்சி மாநாட்டை புறக்கணித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அப்படி செய்ய வேண்டுமாயின் அமைச்சர் பதவியில் இருந்து விலகி விட்டுஅதனை செய்ய வேண்டும் என குறித்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் கூறியுள்ளார்.

இதன் போது பதிலளித்துள்ள ஜீவன் தொண்டமான், அமைச்சராக பதவி வகித்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை எடுப்பது தான் எனவும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதை கட்சி முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளார்.