அரசாங்கத்தின் பிழையான தீர்மானம் நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது – கபீர் ஹாசிம்

245 0

நாடு சுதந்திரமடைந்த காலம் பாரிய பொருளாதார பரச்சினைக்கு முகம்கொடுத்திருக்கின்றது. ஆனால் இந்த நிலைக்கு நாடு வங்குராேத்து அடையவில்லை.

அதனால் அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களின் விளைவே இதற்கு காரணம் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்)சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி என்னால் ஏற்படுத்தப்பட்டது அல்ல என ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த பிரச்சினைக்கு ஜனாதிபதியின் பிழையான தீர்மானங்களே காரணம் என நாங்கள் சாட்சியங்களுடன் பலதடவைகள் இந்த சபையில் தெரிவித்துள்ளோம்.

அதனால் அரசாங்கம் தனதுபிழையான தீர்மானமே இந்த பிரச்சினைக்கு காரணம் என்பதை  ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அத்துடன் பொருளாதார பிரச்சினைக்கு மாத்திரமல்லாது நாட்டின் தேசிய பாதுகாப்பை காட்டிக்கொடுக்கும் நிலைக்கு ஜனாதிபதியினால் நாடு தள்ளிவிடப்பட்டிருக்கின்றது.

ஏனெனில் அரசாங்கம் இனவாத மதவாதத்தை துண்டிவிட்டு நாட்டுக்குள் இனப்பிச்சினையை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்ததால் நாடு மீது வெளிநாட்டு முதலீட்டார்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

தற்போது அரசாங்கம் வெளிநாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன. அது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவிப்பதும் இல்லை.

வெளிப்படை தன்மையுடன் செயற்படுவதும் இல்லை. அதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

மேலும் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்போது எமது நட்பு நாடுகளுடன் கலந்துரையாடி, எமது நாடடின் பாதுகாப்பு,இறையாண்மையை பாதுகாத்துக்கொண்டு எமக்கு உதவி பெற்றுக்கொண்டிருக்க முடியும் அப்போது அதனை செய்யாமல், நாடு பாரிய பிரச்சினைக்கு தள்ளப்பட்ட பின்னர் உதவி கேட்கும்போது அந்த நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு நாங்கள் கட்டுப்படவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

தற்போது அந்த நிலையே ஏற்பட்டிருக்கின்றது. அமைச்சர் பசில் ராஜபக்ஷ் இந்தியாவுக்கு சென்று கடன் பெற்றுக்கொள்ள செய்துகொண்ட நிபந்த என்ன என்பது யாருக்கும் தெரியாது. அதனால் கோத்தாபய ராஜபக்ஷ் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக  இருந்தால் இந்த ஒப்பந்தகளை சபைக்கு வெளிப்படுத்தவேண்டும்.

அத்துடன் பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு சரவதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுமாறு தெரிவித்தபோது, அதனை அரசாங்கம் ஆரம்பத்தில் நிராகத்தது.

அவர்களின் நிபந்தனை நாட்டின் சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்கள். நாட்டின் சுயாதீனத்தை பாதிக்கும் வகையிலான நிபந்தனைக்கு செல்லாமல் இருப்பதற்கு அரசாங்கத்துக்கு பலம் இருக்கவேண்டும். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கையில் அதிகம் கடன் பெற்றவர் 2007இல் மஹிந்த ராஜபக்ஷவாகும்.2,5பில்லியன் டொலர் பெற்றிருந்தார்.

அதனால் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடும்போது அரசாங்கம் நாட்டின் நிபந்தனைகளை முறையாக தெரிவித்து, அந்த உதவிகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.

மாறாக நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எமது அரசாங்கத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர 2017இல் நாணய நிதியத்துடன் கலந்துரையாடியபோது பல நிபந்தனைகளை எமக்கு வித்தார்கள்.

ஆனால் நாங்கள் எமது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்தபோது அவர்கள் எமது கோரிக்கைையை ஏற்றுக்கொண்டு உதவி செய்தார்கள்.

எனவே அரசாங்கம் உரிய நேரத்துக்கு உரிய தீர்மானங்களை எடுக்க தவறியதன் காரணமாகவே நாடு வங்குராேத்து நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.

இது அரசாங்கத்தின் பிழையா தீர்மானங்களால், அரசாங்கத்தினாலே ஏற்படுத்திக்கொண்டதாகும். அமெரிக்காவின் சஞ்சிகை ஒன்றில் இலங்கையின் பொருளாதாரத்தை ராஜபக்ஷ் நிர்வாகம் வங்குராேத்து நிலைக்கு தள்ளி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த செய்தி முழு அமெரிக்காவுக்கும் செல்கின்றது. இதனால் நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் நாங்கள் பாதுகாத்துவந்த எமது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகின்றது என்றார்.