கண்ணகி மாட்டு வண்டில் சவாரி திடல் திறப்பு நிகழ்வும்..! மாட்டு வண்டில் சவாரிகளும்!

247 0

முல்லைத்தீவு வற்றாப்பளை நந்திக்கடல் கரையில் அமையப்பெற்ற கண்ணகி மாட்டு வண்டில் சவாரித்திடல் திறப்பு நிகழ்வு நேற்று முன்தினம் (22) மாலை நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம. உமாமகள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

சவாரி திடல் திறப்பு நிகழ்வினை தொடர்ந்து வட மாகாணத்தினை சேர்ந்த மாட்டு வண்டி சவாரியாளர்கள் கலந்து கொண்டு மாட்டுவண்டி சவாரிபோட்டி நடைபெற்றுள்ளது.

வடமாகாணத்தினை சேர்ந்த 72 சோடி மாடுகள் இதில் கலந்து கொண்டுள்ளன.

அ, ஆ, இ, ஈ, உ என பிரிவுகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன.

இதன்போது அ – பிரிவில் முதற்பரிசான தங்கப்பதக்கத்தினை யாழ்ப்பாணம் சங்குவேலியினை சேர்ந்த கே.சந்திரன் பெற்றுக்கொண்டார்.

ஆ- பிரிவில் தங்கப்பதக்கத்தினை யாழ்ப்பாணம வட்டுக்கோட்டையினை சேர்ந்த விக்னேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

இ- பிரிவில் தங்கப்பதக்கத்தினை மல்லாவி முல்லைத்தீவினை சேர்ந்த த.மனோசாந் பெற்றுக்கொண்டார்.

ஈ- பிரிவில் தங்கப்பதகத்தினை யாழ்ப்பாணம் பொன்னாலையினை சேர்ந்த க.றிஜிதா பெற்றுக்கொண்டார்.

உ- பிரிவில் தங்கப்பதக்கத்தினை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையினை சேர்ந்த முகேஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

5 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டில் முதல் வெற்றிபெற்ற மாட்டுவண்டில்களுக்கு தங்கப்பதக்கமும் இரண்டாம், மூன்றாம் இடத்தினை பெற்ற வண்டில்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கையில் மாடு கொண்டு ஓடுதல் போட்டி மற்றும் வேகம் குறைவாக மோட்டார் சைக்கில் ஓட்டுதல் போன்ற போட்டிகளும் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.