விவசாயிகள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள்!

168 0

மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

தற்போது அறுவடைக்காக காத்திருக்கும் விவசாயிகள் மற்றும்  உழவு இயந்திரத்துக்குத் தேவையான எரிபொருள்களைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

உயிலங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு டிசல்கிடைத்துள்ளதை தொடர்ந்து அதனைப் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதில் பலருக்கு ஏமாற்றமே கிட்டியது.

மன்னார் மாவட்டத்தில் 60 சதவீதமான நெல் அறுவடை செய்யப்பட்டுள்ள போதுமன் 30 சதவீதமான அறுவடை செய்யவுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும், 176 ரூபாய்க்கு டீசல் பெறவேண்டியுள்ளது. அதுவும் போதியளவு பெறமுடியவில்லை  என விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.