கொவிட் மரணங்கள் குறித்த அறிவிப்பு

187 0

நாட்டில் நேற்றைய தினம் (19) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 5 பேர் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 16,431 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 624,592 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் இதுவரையிலும் இலங்கையில் 657,961 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.