பட்டாசு ஆலைகள் நாளை (21-ந் தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என சங்க தலைவர் காத்த லிங்கம் அறிவித்துள்ளார்.
காற்று மாசு ஏற்படுவதாக பட்டாசு உற்பத்திக்கு பயன்படும் முக்கிய மூலப் பொருளான பேரியம் நைட்ரேட் ரசாயன மூலப் பொருளுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. மேலும் சரவெடி பட்டாசுகள் தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டாசு தொழில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இதனை நீக்க வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு கேட்டும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தபோவதாக தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம் (டாப்மா) அறிவித்தது.
இந்த சங்கத்திற்குட்பட்ட பட்டாசு ஆலைகள் விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை செவல்பட்டி, தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இங்கு 90 சதவீத சரவெடிகள் மட்டும் தயாரிக்கப்படுகின்றன.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நாளை (21-ந் தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என சங்க தலைவர் காத்த லிங்கம் அறிவித்துள்ளார்.

