தாம்பரம்- நாகர்கோவில் ரெயில் ‘சூப்பர்- பாஸ்ட்’ ரெயிலாக மாற்றம்

273 0

திருப்பதி- புதுச்சேரி மெமு விரைவு ரெயில் உள்பட 4 முன்பதிவு இல்லாத ரெயில்களை, வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் ஏப்ரல் 14-ந் தேதி முதல் ‘சூப்பர் பாஸ்ட்’ ரெயிலாக மாற்றப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 13 மணி 50 நிமிடங்களில் சென்றடையும் இந்த ரெயில், 20691 என்ற புதிய எண்ணுடன் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 12.50 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும்.

நாகர்கோவிலில் இருந்து 20692 என்ற புதிய எண்ணுடன் மாலை 3.50 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

திருப்பதி- புதுச்சேரி மெமு விரைவு ரெயில் உள்பட 4 முன்பதிவு இல்லாத ரெயில்களை, வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி திருப்பதியில் இருந்து நாள்தோறும் அதிகாலை 4.20 மணிக்கு முன்பதிவு இல்லாத மெமு விரைவு ரெயில் (16111) புறப்பட்டு, அதே நாள் பிற்பகல் 12.50 மணிக்கு புதுச்சேரியை அடையும்.

மறுமார்க்கமாக, புதுச்சேரியில் இருந்து நாள்தோறும் பிற்பகல் 2.55 மணிக்கு முன்பதிவில்லாத மெமு விரைவு ரெயில் (16112) புறப்பட்டு, அதே நாள் இரவு 11 மணிக்கு திருப்பதியை அடையும்.

இதுதவிர, சூலூர் பேட்டை- நெல்லூர் முன்பதிவில்லாத மெமு விரைவு ரெயில் (தினசரி), சென்னை சென்ட்ரல்- சூலூர் பேட்டை முன்பதிவில்லாத மெமு விரைவு ரெயில் (தினசரி), திருவனந்தபுரம்- நாகர்கோவில் முன்பதிவில்லாத விரைவு ரெயில் (தினசரி) ஆகிய ரெயில்களும் இயக்கப்பட உள்ளன.