சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது!

172 0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் புதன்கிழமை (23) நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தீர்மானித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சர்வகட்சி மாநாட்டுக்கு அரசாங்கத்தின்  பத்து பங்காளிக் கட்சிகளில் இருந்து இரண்டு பிரதிநிதிகளை மாத்திரம் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் தெரியவருவதுடன், சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலோ, ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலோ, அமைச்சரவையிலோ விவாதிக்காமல் சர்வகட்சி மாநாட்டை கூட்டுவது பொய் என்றும் பங்காளிக் கட்சியின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் அரசாங்கத்தின் மீது பழி சுமத்தும் இந்த தருணத்தில், அந்த கண்டனத்தை பகிர்ந்து கொள்வதற்காக சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.