அமர் ஜவான் ஜோதியில் மலரஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

317 0

டெல்லியில் குடியரசு தினத்தையொட்டி, அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்தியநாட்டின் 68-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதையில் அரசு சார்பில் குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக தாமதமாக விழா தொடங்கியது.

விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, முதலில் அமர் ஜவான் ஜோதியில் மலர் வளையம் வைத்து, உயிர்நீத்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார். முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து குடியரசு தின விழா நடைபெறும் ராஜபாதைக்கு புறப்பட்டார் மோடி.

அதேசமயம் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியும், சிறப்பு விருந்தினரான அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானும் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து ராஜபாதைக்கு புறப்பட்டு வந்தனர். அவர்களை பிரதமர் மோடி மற்றும் முப்படைத் தளபதிகள் வரவேற்றனர்.