மன்னார் பூநகரியில் இரண்டு பாரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்திதிட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவின் அதானி குழுமத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
500மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இரண்டு பாரிய புதுப்பிக்கதக்க எரிசக்தி திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பிலேயே ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.
அதானிகுழுமத்தின் பிரதிநிதிகளும் இலங்கை மின்சார சபை இலங்கை முதலீட்டு சபை பேண்தகுசக்தி அதிகார சபை ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்

