இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவியை இந்திய ரிசர்வ் வங்கி

147 0

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வியாழன் அன்று இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரியை தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

பெற்றோலிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் டொலர் கடன் வழங்குவதற்காக இலங்கையுடன் 2022, பெப்ரவரி 2, அன்று இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) உடன்படிக்கையில் ஈடுபட்டது.

எக்ஸிம் வங்கியின் மொத்தக் கடனில், குறைந்தது 75 சதவீத மதிப்புள்ள பொருட்கள், பணிகள் மற்றும் சேவைகள் இந்தியாவில் இருந்து விற்பனையாளரால் கொள்வனவு வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 25 சதவீத பொருட்கள் மற்றும் சேவைகளை இந்தியாவிற்கு வெளியே இருந்து விற்பனையாளர் (இலங்கை) வாங்கலாம்.

கடன் வரியின் கீழ் உள்ள ஒப்பந்தம் 2022, பெப்ரவரி 18 முதல் நடைமுறைக்கு வந்தது.

இலங்கை தற்போது கையிருப்பு வீழ்ச்சியுடன் கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியில் தத்தளிக்கிறது. இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய டொலர்கள் இல்லாததால், கிட்டத்தட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.