செய் அல்லது செத்துமடி ;அரசுக்கு சஜித் அணி எச்சரிக்கை!

284 0

செய் அல்லது செத்துமடி; இதுவே அரசுக்கு நாம் கூறும் இறுதி அறிவுரையாகும்.”

என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பிரிவினருக்கும், மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (09) மத்திய வங்கி கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுமாறு நாம் ஒன்றரை வருடங்களாக வலியுறுத்தி வருகின்றோம். ஆனால், பஸ் சென்ற பின்னர் பயணத்துக்குத் தயாராகுவது போல், தற்போதுதான் அது பற்றி அரசு சிந்தித்துள்ளது.

இந்த அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. அதனால்தான் சர்வகட்சி மாநாடு எனக் கூறிக்கொண்டு, தற்போது பொருளாதார சபையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டால், நாட்டை மீட்க ஒத்துழைப்பு வழங்குவோம்” – என்றார்.