கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபர் கொலை

237 0

களுத்துறை பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக வயோதிபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் நாகொட பிரதேசத்தில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக 32 வயதுடைய நபர் அவரது மனைவியின் தந்தையை இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் 72 வயதுடைய ஐ.டி.எச். வீதி, நாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.