நாட்டில் பல பகுதிகளிலும் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் எட்டு சந்தேகநபர்கள் கைது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பேலியகொட
பேலியகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வனவாசல பிரதேசத்தில் பேலியகொட பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 180 மில்லிகிராம் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய பெலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பெலியகொடை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
பொரளை
பொரளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டி20 தோட்டப்பகுதியில் பொரளை பொலிசாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 7 கிராம் 390 மில்லிகிராம் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொரளை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடவத்தை
கடவத்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பண்டாரவத்த பிரதேசத்தின் அதிவேக வீதியின் பாலத்திற்கு அருகில் கடவத்தை பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய கடவத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சம்பவம் தொடர்பில் கடவத்த பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சப்புகஸ்கந்த
சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சப்புகஸ்கந்த பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட இருவேறு சுற்றிவளைப்புகளில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மாகொல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 17 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்போருளுடன் 37 வயதுடைய மாகொல பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலும் மற்றைய சுற்றிவளைப்பில் தஹம் மாவத்தை பிரதேச பகுதியில் 12 கிராம் 100 மில்லிகிராம் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய ஹெயியன்துடுவ பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
இரு சம்பவங்களில் தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மாலம்ப
மாலம்ப பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிங்கபுர பிரதேசத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 12 கிராம் ஹெரொயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளாரகள்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 33 மற்றும் 36 வயதுடைய மொரட்டுவை, மடபாதை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவார்.
இரு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வத்தளை- எண்டேரமுல்லைஎண்டேரமுல்லை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அப்புகேவத்த பிரதேசத்தில் எண்டேரமுல்ல பொலிசாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 13 கிராம் 90 மில்லிகிராம் ஹெரோயின் போதைபொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 28 மற்றும் 29 வயதுடைய உடதலவின்ன, வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவார். எண்டேரமுல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

