நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

173 0

நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவும் டீசல், பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடுகளுடன் தற்போது மீண்டும் சமையல் எரிவாயுவிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

டொலர் நெருக்கடியின் காரணமாக சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்களை விடுவித்துக் கொள்ள முடியாமையினால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பேக்கரி, சிற்றுண்டிசாலைகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் துறைசார் சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

நாட்டில் பாவனைக்கு தேவையானளவு டீசல் மற்றும் பெற்றோல் என்பவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தானம் தெரிவித்துள்ள போதிலும், பெரும்பாலான பிரதேசங்களில் எரிபொருளுக்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.