ஜெர்மனி நாட்டின் பிரதமர் பதவிக்கு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஏஞ்சலா மெர்கெலை எதிர்த்து சமூக ஜனநாயக கட்சி வேட்பாளரான மார்ட்டின் ஸ்கல்ட்ஸ் போட்டியிடுகிறார்.
ஜெர்மனி நாட்டு பாராளுமன்றத்துக்கு உள்ள 598 இடங்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியை சேர்ந்தவரும் தற்போதைய பிரதமருமான ஏஞ்சலா மெர்கெல் மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து போட்டியிடுவதற்கான வேட்பாளரை எதிர்க்கட்சியான சமூக ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஜனநாயக கட்சி தலைவரான சிக்மார் கேப்ரியேல் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2012 முதல் தொடர்ந்து மூன்றுமுறை ஐரோப்பிய பாராளுமன்ற தலைவராக பதவி வகித்த மார்ட்டின் ஸ்கல்ட்ஸ்(51), ஏஞ்சலா மெர்கெலை எதிர்த்து போட்டியிடுவார் என தெரிவித்துள்ளார்.

