யாழ்.சாவகச்சோி – சங்கத்தானை பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞன் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்கத்தானை ரயில் நிலையத்தை அண்டிய பகுதியில் நேற்றையதினம் கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரம் நடப்பதாகக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து அப்பகுதிக்குச் சென்ற 52வது படைப்பிரிவின் இராணுவ புலனாய்வு பிரிவினர் இளைஞனை கைது செய்துள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் சாவகச்சோி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் மடத்தடி பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.

