மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிண்ணயடி கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (2022.03.06) மாமனிதர் சிவநேசன் ஐயா ( கிட்டிணன் சிவனநேசன் ) அவர்களின் 14 ஆவது நினைவேந்தல் நிகழ்வு தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளறும் பிரதேச சபை உறுப்பினருமான குணராசா குணசேகரம் ஏற்பாட்டில் நடைபேற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கணபதிப்பிள்ளை குககுமாரராஜா ஆகியோர் கலந்து கொண்டதோடு மாமனிதர் சிவனேசன் ஐயா நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணமும் வழங்கப்பட்டது.













