18ம் நாளாக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும்அறவழிப்போராட்டம்.

543 0

சுவிசு பயேர்ன் , மாநகரசபை முன்றலில் இருந்து எழுச்சி கரமாக மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்தொடர்ந்தது. சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலகசுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு என கடும் மலை ஏற்றத்தின் மத்தியிலும் நெடுந்தூரம்பயணித்து லெளசாண் மாநகரத்தினை வந்தடைந்தது. மாநகர முதல்வரிடம் மனு ஒப்படைக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது. நாளை மீண்டும் லெள்சான் மாநகரத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் அவை (ஈகைப்பேரொளிமுருகதாசன் திடல்) முன்றலினை நோக்கி தொடர்கின்றது.

“ஓரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போராட்டமாக தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது”
– தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.