கண்டியிலும் கையெழுத்து வேட்டை

225 0

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் எனக் கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று கண்டியிலும் முன்னெடுக்கப்பட்டது.

இன்று பிற்பகல் கண்டி, ஜோர்ஜ் டி. சில்வா பூங்கா (டொரிங்டன்) முன்னால் இந்த நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மூவின மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தத்தமது கையெழுத்துக்களைப் பதிவிட்டனர்.

நாளை ஞாயிற்றுக்கிழமை ஹட்டனிலும், பண்டாரவளையிலும் இந்தக் கையெழுத்துச் சேகரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Gallery Gallery Gallery Gallery Gallery