உக்ரைன் போர் குறித்து கருத்து- ரஷியாவில் சமூக வலைதளங்கள் முடக்கம்

137 0

உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், அதனை முடக்க ரஷியா நடவடிக்கை எடுத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷிய படை உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கிய நகரங்கள் மீது மும்முனை தாக்குதலை கடந்த 9 நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்த போரில் இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமான கட்டிடங்கள், குடியிருப்புகள் மற்றும் மேம்பாலங்கள் இடிந்து சேதமானது.

இந்த போரால் உக்ரைனில் வசிப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பான இடங்களை தேடி அவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

 

ரஷிய ராணுவம்

 

இந்த தாக்குதலை உடனடியாக ரஷியா நிறுத்த வேண்டும் என பேஸ்புக், யூ-டியூப், இன்ஸ்ட்டாகிராம், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டு வேகமாக பரவி வருகின்றன.

உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், அதனை முடக்க ரஷியா நடவடிக்கை எடுத்துள்ளது. பல இடங்களில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவிட முடியாமல் தவித்து வருகின்றனர்.