எதிர்வரும் தேர்தலில் எப்பக்கம் செல்லலாம் என்ற முயற்சியில் பங்காளி கட்சியினர்..!

133 0

அமைச்சரவையில் ஜனாதிபதிஇபிரதமர் முன்னிலையில் பூனையை போல் அமைதியாக இருக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச மக்கள் மத்தியில் வீரனைபோல் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துரைக்கிறார்.

எதிர்வரும் தேர்தலில் எப்பக்கம் செல்லலாம் என்ற முயற்சியில் பங்காளி கட்சியினர் தற்போது ஈடுப்பட்டுள்ளார்கள் என துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் விமல்வீரவன்ச தற்போது அவர் தலைமையில் முழு நாட்டையும் சரியான பாதைக்கு கொண்டு செல்வதாக குறிப்பிடுவது நகைப்புக்குரியது.
அரசாங்கத்தில் இருக்க விருப்பமில்லையாயின் பங்காளி கட்சிகள் தாராளமாக அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் எனவும் குறிப்பிட்டார்.

துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் ஒன்றினைந்து நேற்று முன்தினம் முழு நாட்டையும் சரியான பாதையில் என்ற கொள்கை திட்டத்தை வெளியிட்டனர்.

பங்காளி கட்சிகளில் உள்ளடங்கும் தரப்பினரை முழு நாட்டு மக்களம் நன்கு அறிவார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇபாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்னதேரரும் நல்லாட்சி அரசாங்கத்தையும்இஅதற்கு முற்பட்ட அரசாங்கத்தையும் பலவீனப்படுத்தினார்கள்.சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டையும்இஅரசியல் துரோகத்தையும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச அரசாங்கத்திலிருந்து முழுமையான வரப்பிரசாதங்களையும் எவ்வித குறையுமின்றி பெற்றுக்கொண்டு தற்போது நிதியமைச்சருக்கும்இஅரசாங்கத்திற்கும் எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் விமல்வீரவன்ச தற்போது அவர் தலைமையில் முழு நாட்டையும் சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிப்பது நகைப்புக்குரியது.

அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும் விடயங்களில் பங்காளி கட்சி தலைவர்கள் ஒன்றினைகிறார்கள்இநெருக்கடி நிலைமை தோற்றம் பெறும் போது அரசாங்கத்திற்கும்இதமக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை போன்று கருத்துரைக்கிறார்கள்.

அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதிஇபிரதமர் முன்னிலையில் பூனையை போன்று அமைதியாக இருக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச மக்கள் மத்தியில் ஒலிவாங்கி கிடைத்தவுடன் வீரனை போல் கருத்துரைக்கிறார்.

எதிர்வரும் தேர்தலில் எப்பக்கம் செல்லலாம் என்ற முயற்சியில் பங்காளி கட்சிகள் தற்போது ஈடுப்பட்டுள்ளன.
அரசாங்கத்துடன் ஒன்றினைந்து செயற்பட முடியாவிடின் பங்காளி கட்சிகள் தாராளமாக வெளியேறலாம்.அரச வரபிரசாதங்களை அனுபவித்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது பயனற்றது என்றார்.