நாளை 7.30 மணித்தியால மின்வெட்டு

171 0
நாடளாவிய ரீதியில் நாளை (04) 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணித்தியாலங்களும், மாலை 06 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலில் இருக்கும்.