பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கீடு: தமிழக அமைச்சரவை 5-ந்தேதி கூடுகிறது

262 0

பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் அளிப்பதற்காக அமைச்சரவை கூட்டம் வரும் 5-ந் தேதி முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 5-ந்தேதி மாலை 5 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தில் நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சட்டப் பேரவை கூட்டம் மார்ச் 18-ந்தேதி கூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் அளிப்பதற்காக அமைச்சரவை கூட்டம் வரும் 5-ந் தேதி முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், பெண்களுக்கு ரூ.1000 வழங்குவது போன்ற தேர்தலின் போது தி.மு.க. அறிவித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகவும் நகர்ப்புற பகுதிகளில் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களை விரைந்து முடிப்பது போன்றவை குறித்தும் ஆலோசித்து ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.