உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து 600-க்கும் மேற்பட்ட சீன மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி ஒடேசா என்ற நகரில் தங்கி உள்ளனர்.
உக்ரைனில் சீனாவை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புகள் படித்து வருகின்றனர்.
தற்போது ரஷியா உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருவதால் சீனா மாணவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். பதுங்கு குழிகள் மற்றும் சுரங்க ரெயில் நிலையங்களில் அவர்கள் உயிருக்கு பயந்து தஞ்சம் அடைந்து உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சீன மாணவர் ஒருவர் உக்ரைன் கிழக்கு பகுதியில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்துக்குசென்று கொண்டிருந்தார். அப்போது நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஆனால் அந்த மாணவரை பற்றி மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இதுபற்றி அறிந்த மற்ற சீன மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீன மாணவர்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி போலந்து மற்றும் சுலோ வாக்கியா நாட்டு எல்லையில் தவித்து வருகிறார்கள்.
மேலும் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து 600-க்கும் மேற்பட்ட சீன மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி ஒடேசா என்ற நகரில் தங்கி உள்ளனர்.
உக்ரைனில் பரிதவித்து வரும் சீன மாணவர்களை மீட்க அந்நாட்டு அதிபர் ஜின்பிங் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். உக்ரைனில் உள்ள அந்நாட்டு தூதரகம் மூலம் மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

