மேயர், துணை மேயர் பதவிகளுக்கு கடும் போட்டி நிலவியதால் கவுன்சிலர்களை பாதுகாக்கும் விதமாக அவர்களை சுற்றுலா அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 50 இடங்களில் வெற்றி பெற்றது.
தேர்தல் முடிவு வெளியான அன்றைய தினமே வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கேரளாவுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
மேயர், துணை மேயர் பதவிகளுக்கு கடும் போட்டி நிலவியதால் கவுன்சிலர்களை பாதுகாக்கும் விதமாக அவர்களை சுற்றுலா அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இன்று பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர்கள் அனைவரும் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். காலை 11 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்திற்கு வேன்களில் வந்து இறங்கினர்.
அவர்களை கண்டதும் குழந்தைகள், உறவினர்கள் என அனைவரும் தங்களது அன்பை கட்டித்தழுவி பரிமாறிக்கொண்டனர். பின்னர் கவுன்சிலர்கள் அனைவரும் பதவி ஏற்றுக் கொண்டனர். பதவியேற்பு முடிந்தவுடன் சுமார் 30-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மீண்டும் 5 வேன்களில் ஏற்றி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மேயர், துணை மேயர் பதவிகளுக்கான மறைமுகதேர்தல் நடைபெற உள்ளது.
அப்போது எந்தவித குறுக்கீடும் இல்லாமல் பாதுகாப்பாக தலைமை அறிவித்த வேட்பாளரை மேயராக தேர்வு செய்யவேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

