சவுதி அரேபியாவில் தீவிரவாதத்தில் ஈடுபட்ட 69 பாகிஸ்தானியர்கள் கைது

342 0

சவுதி அரேபியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த 69 பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.

சவுதி அரேபியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த 69 பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.

சமீபத்தில் ஜெட்டாவில் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகளை பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் கொடுத்த தகவலை தொடர்ந்து அல்நசீம் மாவட்டத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த பாத்திமா ரமாதன் பலோசி முராத் என்ற பெண்ணை அவரது கணவருடன் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இவர்கள் போன்று தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக 69 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சவுதிஅரேபியாவில் இதுபோன்று 40 நாடுகளை சேர்ந்த 5085 பேர் கைது செய்யப்பட்டு 5 உளவுதுறை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சவுதி அரேபியாவை சேர்ந்த 4,254 பேரும், ஏமனைச் சேர்ந்த 282 பேரும், சிரியாவை சேர்ந்த 218 பேரும் அடங்குவர்.