சுவிஸ் சூரிச் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற கரோக்கே கானக்குயில் 2022!

667 0

தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க் கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாகவும், சூரிச்வாழ் அனைத்துக் கலைஞர்களினதும் திறமைகளை ஊக்குவித்து மதிப்பளிக்கவும் சூரிச் மாநிலத்தில் இனியொரு விதி செய்வோம் நிகழ்வில் ஐரோப்பா ரீதியிலான கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடல் போட்டியானது 26.02.2022 சனி அன்று சூரிச் மாநிலத்தில் எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சூரிச் மாநிலத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இனியொரு விதிசெய்வோம் நிகழ்வு சார்ந்த கலைப்படைப்புக்கள் தற்போது நிலவும் கொரோனா நோய்த்தொற்றுப் பாதுகாப்பு நடைமுறைகளின் காரணமாக தவிர்க்கப்பட்டிருந்த போதிலும், அந்நிகழ்வின் அங்கமான கரோக்கே கானக்குயில் 2022 போட்டியானது பொதுச்சுடரேற்றலுடன், நிகழ்வுச்சுடர், அகவணக்கத்துடன்; ஆரம்பமாகியது.
நான்காவது தடவையாக பாலர், கீழ், மத்திய, மேல் பிரிவுகளாக நடாத்தப்பட்ட போட்டிகளில் ஆர்வத்தோடு பங்குபற்றிய போட்டியாளர்கள் தமது தமிழ்மொழியாற்றலுடன் தமது உணர்வுகளை எழுச்சிப்பாடல்களினூடாக வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்கூறப்பட்ட பாலர் மற்றும் கீழ்ப்பிரிவுகளில் பங்குபற்றிய போட்டியாளர்களிலிருந்து தகுதி பெற்ற மூவர் தெரிவுசெய்யப்பட்டு ஷஇளம் கானக்குயில் 2022| விருதுக்கான இறுதிப்போட்டியும், மத்திய மற்றும் மேல் பிரிவுகளிலிருந்து பங்குபற்றிய போட்டியாளர்களிலிருந்து தகுதி பெற்ற மூவர் தெரிவுசெய்யப்பட்டு ஷகானக்குயில் 2022| விருதுக்கான போட்டியும் நடாத்தப்பட்டது.
வாழிட நாடுகளின் பன்மொழி, பல்லினப் பண்பாட்டுச் சூழலிலும் தமிழ் இன உணர்வோடும் தாயகப்பற்றோடும் ஷகானக்குயில் 2022| தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி நிகழ்விலே பங்குபற்றிய அனைவருக்கும் நினைவுப்பரிசில்கள் வழங்கிப்பட்டதுடன் நிகழ்வில் ஓவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு வெற்றிக்கேடயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் நிகழ்வுகள் சிறப்பாகவும், எழுச்சியாகவும் நிறைவுபெற்றன.
இப்போட்டி நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்கள், போட்டியாளர்கள், நடுவர்கள், ஆசிரியர்கள், ஆதரவாளர்கள், இனஉணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எமது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கானக்குயில் திருஷh பாலகுமரன்;
இளம் கானக்குயில் கனிஷh பாலகுமரன்

பாலர் பிரிவு:
1ம் இடம் அஷ;ரியா ரூபகரன்
2ம் இடம் டால்மின் மரியாம்பிள்ளை
3ம் இடம் தாணிகா திலீபன்

கீழ்ப்பிரிவு:
1ம் இடம் கனிஷh பாலகுமரன்
2ம் இடம் அபிநயா ஆனந்தகுமரன்
3ம் இடம் பாரதி லோகதாசன்
3ம் இடம்; தமிழ் இரவீந்திரன்

மத்தியபிரிவு:
1ம் இடம் ஆர்த்திகன் கனகசுந்தரம்
2ம் இடம் ஹரிணி பாலகணேஷன்
3ம் இடம் திருஷh பாலகுமரன்

மேற்பிரிவு:
1ம் இடம் நேமிநாதன் இராசலிங்கம்
2ம் இடம் பிருத்திகா சிவரஞ்சன்
3ம் இடம் தீபன் தவிதுராசா

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.