வலி.வடக்கில் பொது மக்களின் வீடுகளை உடைக்கும் இராணுவம் (படங்கள் இணைப்பு)

428 0

DSC_0628வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பொது மக்களின் வீடுகளை உடைத்தழிக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைளில் இராணுவத்தினர் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றதைக் அவதாணிக்கக் கூடியதாக உள்ளது.

அண்மையில் பகுதியளவில் விடுவிக்கப்பட்ட கட்டுவன், குரும்பசிட்டிப் பகுதியில் காணப்படும் வீடுகளே இராணுவத்தினால் இடித்தழிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு விடித்தழிக்கப்படும் வீடுகளில் இருக்கும், ஓடுகள், சுரை மரங்கள், சீமெந்துத் துண்கள் மற்றும் கல்லுகள், கதவு, ஜன்னல் போன்றவை மறைவான ஒரு இடத்தில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றது.

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக அண்மையில் 201.3 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக காங்கேசன்துறை, கட்டுவன், குரும்பசிட்டிப் பிரதேசங்களின் ஒரு தொகுதி நிலங்களே இதன் போது விடுவிக்கப்பட்டிருந்தன.

குறித்த பகுதிகளில் காணப்பட்ட பொரும் தொகையான பொது மக்களின் விடுகள் இடித்தழிக்கப்பட்ட பின்னரே மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அழிவடையாத நிலையில் மக்களின் வீடுகளும் காணப்படுகின்றன.

இவ்வாறு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் காணப்படும் வீடுகளில் இராணுவத்தினர் தமது பாடைமுகாங்ளை அமைத்து அதில் நிலை கொண்டுள்ளனர். குறிப்பாக உயர்பாதுகாப்பு வலைய எல்லைகளில் உள்ள வீடுகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அவ்வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இங்கிருந்து வெளியேறும் இராணுவத்தினர் தாம் நிலை கொண்டிருந்த வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவ வருகின்றனர். இவ்வாறு இடித்தழிப்பதன் ஊடாக அவ்வீட்டில் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர் என்பதற்கான தடையங்களை அழிப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது மக்களின் வீடுகளில் உள்ள தடையங்களை இல்லாமல் ஆக்குவதற்காக நடைபெறும் இடித்தழிப்புகளின் போது அவ் வீடுகளில் உள்ள ஓடகள், கூரை மரங்கள், சீமெந்துத் துண்டுகள், கற்கள், கதவு, நிலை, ஜன்னல்கல் போன்றவற்றினை இராணுவத்தினர் இரகசியமாக உயர்பாதுகாப்பு வலைய எல்லைக்குள் உள்ள வீடென்றில் சேகரித்து வருகின்றனர்.

இவ்வாறு சேகரிக்கப்படும் பொது மக்களின் சொத்துக்கள் இராணுவ வாகனங்களில் ஏற்றப்பட்டு வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றது.

பொது மக்களின் கண் முன்Nனு நேற்றும் குரும்பசிட்டிப் பகுதியில் உயர்பாதுகாப்பு வலைய எல்லைகளுடன் உள்ள வீடுகளை உடைக்கும் நடவடிக்கையிலும், அவ்வீடுகளில் இராணுவத்தினர் தங்கிருந்தமைக்கான தடையங்களையும் அழிக்கும் நடவடிக்கையில் இராணுவச் சிப்பாய்கள் ஈடுபட்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

DSC_0620 DSC_0628