சுவிஸ்குமார் எவ்வாறு கொழும்பிற்கு தப்பிச் சென்றார் குற்றப்புலனாய்வு பிரிவின் அறிக்கையால் எதிர்பார்ப்பு

466 0

M

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நாளை புதன்கிழமை மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இவ் விசாரணையின் போது சகிக்குமார் எனப்படும் சுவிஸ்குமார் யாழ்ப்பாணத்தில் இருந்து எவ்வாறு கொழும்பிற்கு தப்பிச் சென்றார் என்பது தொடர்பாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியாலினால் கேட்கப்பட்ட 21 கேள்விக்கு பதில்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நீதி மன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வருடம் மே மாதம் பாடசாலைக்குச் சென்ற வித்தியா என்னும் மாணவி கடத்திச் செல்லப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களின் ஒருவரான சுவிஸ் குமார் யாழ்;பாணத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலும் எவ்வாறு அங்கிருந்து தப்பிச் சென்று கொழும்பிற்குச் சென்றிருந்தார் என்பது தொடர்பாக நீதவான் வை.எம்.எம்.ரியாலினால் 21 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

இக் கேள்விகள் கேட்கப்பட்டு ஒரு மாதங்கள் ஆகின்ற நிலையில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள வழக்கு விசாரணைகளின் போது குறித்த கேள்விகளுக்கான பதில்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.