துப்பாக்கியுடன் ஒருவர் கைது

280 0

இக்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபர் உடவத்துர, நாமல் ஓயா பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று அம்பாறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கும் இக்கினியாகல பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதேநேரம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் . இகினியாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.