மேல் மாகாணத்தில் 1,084 பேர் கைது

255 0

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது 1,084 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 556 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் ஆவர். மேலும் 34 சந்தேக நபர்கள் பல்வேறு குற்றங்களுக்காகவும், 352 பேர் ஊழல் தடுப்புக் குற்றங்களுக்காகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.

நேற்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.