நெல்லில் களைச்செடிகளை அவ்வப்போது அகற்றுவதால் பயிர்களுக்கு தேவையான காற்றோட்டம் சீராக கிடைக்கும்.
ஆனைமலை ஒன்றியத்தில் மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லூரியில் இறுதியாண்டு பி.எஸ்சி., (வேளாண்) பயிலும் மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஆனைமலை இந்திரா நகரில் விவசாயிகளுக்கு நெல்லில் களைச்செடிகள் அகற்றுதல் மற்றும் களை மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தனர்.
விவசாயிகளுடன் இணைந்து களைச்செடிகளை அகற்றினர்.
மாணவிகள் பேசுகையில்,
‘நெல்லில் களைச்செடிகளை அவ்வப்போது அகற்றுவதால் பயிர்களுக்கு தேவையான காற்றோட்டம் சீராக கிடைக்கும். உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன் முழுமையாக கிடைக்கும்.
ஊட்டச்சத்துக்களின் அளவும் குறையும். பயிரின் வளர்ச்சி அதிகரித்து அதிக கதிர் பிடித்து, மகசூல் அதிகரிக்கும். ஆட்களை வைத்தோ அல்லது ‘கோனோ வீடர்’ எந்திரம் வைத்தோ களைகளை அகற்றலாம் என்றனர்.

