தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும்!

209 0

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும் இன்றைய தினம் கொழும்பு – வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.

இதன்போது கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் நிகழ்கால செயற்பாடுகள் பற்றியும் ஆராயப்பட்டன.பின்னர் புதிய நிர்வாக குழு தெரிவுசெய்யப்பட்டது.

அதன்படி புதிய நிர்வாகத்தின் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக சிறீகஜன் தெரிவு செய்யப்பட்டதுடன், செயலாளராக கு.ஜெயந்திரன், உபதலைவராக லியோதர்ஷனும், உப செயலாளராக தர்மினி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஆர்.சிவராஜா, எஸ். அனந்த் பால கிட்ணர், என். ஜெயகாந்தன், வீ.பிரியதர்ஷன், ஆர்.சேதுராமன், கி.லக்ஸ்மன் சிசில், பிரியங்கா சந்திரசேகரம், கே.ஹரேந்திரன், கே.பிரசன்னகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

வடக்கு மாகாணத்தின் இணைப்பாளராக சர்வானந்தா, கிழக்கு மாகாணத்தின் இணைப்பாளராக சரவணபவன், மலையகத்தின் இணைப்பாளராக சிவகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தினை சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்களை உள்ளடக்கி இந்த புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.