யாழ்., திருநெல்வேலியில் சிக்கியது கைக்குண்டு

320 0

யாழ்., திருநெல்வேலி, கேணியடிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருநெல்வேலி, கேணியடிப் பகுதியிலுள்ள காணியொனறில் வீட்டுக்கான அத்திவாரம் வெட்ட முற்பட்டபோது குறித்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து விசேட அதிரடிப் படையின் உதவியுடன் குறித்த குண்டு மீட்கப்பட்டது.

மேலும், குறித்த கிடங்கை வெட்டும்போது ஏதேனும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கோப்பாய் பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.