கச்சத்தீவு திருவிழாக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

196 0

எதிர்வரும் பங்குனி மாதம் 11,12 ஆம் திகதிகளிலே வரலாற்று சிறப்பு மிக்க புனித கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இதுவரை இந்திய பக்தர்கள் குறித்த கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் உற்சவம் தொடர்பிலான வருகைக்கு எதுவும் கூறமுடியாது உள்ளது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த இருநாள் திருவிழாக்கள் தொடர்பிலான ஊடக சந்திப்பு நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது கருத்துதெரிவிக்கையில் அவர் இதனைத்தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

தற்போது கொரோனாத் தொற்று நிலைமைகளை பொறுத்து 500 உள்ளூர் பக்தர்கள் மாத்திரம் பங்குபற்று பெற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப் படுகின்றது.

குறிப்பாக புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கொரோனாத் தடுப்பூசியின் சைனோப்பார்ம் உள்ளிட்ட இரண்டு ஊசிகளும் பூஸ்டர் தடுப்பூசியும் பெற்றுயிருக்க வேண்டும். அது மிகமுக்கியமாக காணப்படுகின்றது.

அதற்கான ஆதார அட்டையினை தன்வசம் வைத்திருக்க வேண்டும். அப்படி பயன்படுத்தியவர்கள் பெயர் விபரங்கள் செல்ல இருக்கின்றப் படகுகள் என்பன பற்றி படகு இலக்கங்களை குறித்து விண்ணப்பங்கள் செலுத்தும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் அதற்கு பங்கு குரு முதல்வர்களுடன் கலந்துரையாடி அதற்காக முடிவினை எடுப்பார்கள் என தெரிவித்தார்.

வேறு இதர செயற்பாடுகள் உற்சவத்தினை தவிர யாவும் தடுக்கப்பட்டுள்ளன. வழமைக்கு மாறாக சில திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு கடைகள் மூலமாகதான் மக்களின் அத்தியாவசிய தேவைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளது. மட்டுப்படுத்தப்பட்டளவிலான கண்காணிப்புடன் ஆன சுகாதார பாதுகாப்புடன் மட்டும்தான் ஈடுபடலாம். இதற்கு முன்னுரிமை அடிப்படையில் உற்சவம் நடைபெறவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.