திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக மாஞ்சோலை சேனையில் வீடொன்று, இன்று (13) காலை இடிந்து விழுந்துள்ளது.
இதன்போது வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, இந்த அனர்த்தம் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேசத்தில் தொடர்மழையால் தாழ் நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

