பெருமளவான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

255 0

நேற்று (12) இரவு 7.30 மணி அளவில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் விசேட சுற்றிவளைப்பில், பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் திருமணம் முடித்து மல்லாகம் பகுதியில் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் மல்லாகத்தில் உள்ள வீடு ஒன்றில் வைத்து 265 போதை மாத்திரைகளுடன், இராணுவ புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்து தெல்லிப்பளை பொலிஸாரிடம் கையளித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்