காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அயகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிறுவனங்களுக்குச் சொந்தமான விவசாயம் செய்யப்படாத காணிகளை சுவீகரித்து மீண்டும் பயிர்ச்செய்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

