எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தால் எவ்வித அறிவித்தலும் வெளியிடப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வரும் சூழ்நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என்றார்.
லங்கா ஐஓசி அண்மையில் எரிபொருள் விலையை அதிகரிப் பதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரிக்கவுள்ளதாக அண்மையில் அரசாங்கத்துக்கு அறிவித்திருந்தது.

