’’சட்டத்தின் மீதான பயம் நீங்கியுள்ளது’’

261 0

நாட்டின் சட்டத்தின் மீதான அச்சம் சமூகத்தில் படிப்படியாகக் குறைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று(10) இடம்பெற்ற விவாதத்தில் கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் கூறினார்.

அத்துடன், சட்டத்தின் ஆட்சி முறையாகச் செயற்படுத்தப்படுகின்றதா என்ற பிரச்சினை தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.