பயணிகளும் நடத்துனரும் சாரதியும் தப்பியுள்ளனர்!

295 0

பொலன்னறுவை சிங்ஹபுர வீதியில் யானை வளைவு பிரதேசத்தில், பொலன்னறுவை வடக்கு கால்வாய்க்குள் தனியார் பஸ்ஸொன்று புரண்டு, போக்குக்குள் சிக்கிக்கொண்டமையால் அதில் பயணித்தவர்கள்  தப்பியுள்ளனர்.

ஹிங்குரான்​கொட பன்சல்கொடெல்ல பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் சேவையாற்றும் பெண்களை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸூக்குள் இறுகி காயமடைந்த பெண்கள் ஏழுபேர், பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற போது. அதில், 30க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.