சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி மண்டல பகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்களும் ஒதுக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ந்தேதி சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
தொடர்ந்து விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நாளை (வியாழக்கிழமை) சேலம் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை காலை 9.30 மணிக்கு வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து வாழப்பாடியில் உள்ள வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார்.
பின்பு 10.30 மணிக்கு தம்மம்பட்டி, கீரிப்பட்டி, செந்தாரம்பட்டி பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்து தம்மம்பட்டியில் உள்ள கொங்கு திருமண மண்டபத் திலும், 11.30 மணிக்கு தெடாவூர், கெங்கவல்லி, வீரகனூர் பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்து கெங்கவல்லி ராமலிங்கம் திருமண மண்டபத்திலும் நடைபெறும் கூட்டங்களில் பேசுகிறார்.
மதியம் 2 மணிக்கு ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஆத்தூர் கோட்டை எல்.ஆர்.சி. திருமண மண்டபத்திலும், பெத்தநாயக்கன் பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்து வைத்தியகவுண்டம்புதூர் ஐஸ்வர்யா திருமண மண்டபத்திலும், அயோத்தியா பட்டணம் பேரூராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேளூர் ரோட்டில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்திலும் நடைபெறும் கூட்டங்களில் பேசுகிறார்.
பின்னர் மாலை 6 மணிக்கு சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி மண்டல பகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதையடுத்து 12-ந்தேதி காலை 8.30 மணிக்கு பனமரத்துப்பட்டியில் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 9.30 மணிக்கு ஆட்டையாம்பட்டி, மல்லூரிலும், 10.30 மணிக்கு இளம்பிள்ளை, 11.30 மணிக்கு இடங்கணசாலை, 12.30 மணிக்கு சங்ககிரி, 3 மணிக்கு தேவூர், அரசிராமணி, 4 மணிக்கு பூலாம்பட்டி, 4.30 மணிக்கு எடப்பாடி, 6 மணிக்கு கொங்கணாபுரம், 6.30 மணிக்கு சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மாப்பேட்டை மண்டல பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
13-ந்தேதி காலை 8.30 மணிக்கு ஓமலூர், காடையாம்பட்டி, கருப்பூரில் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 9.30 மணிக்கு மேச்சேரி, 10.30 மணிக்கு மேட்டூர், கொளத்தூர், 11.30 மணிக்கு இடங்கணசாலை, 12.30 மணிக்கு சங்ககிரி, 3 மணிக்கு பி.என்.பட்டி, வீரக்கல்புதூர், மதியம் 2 மணிக்கு நங்கவள்ளி, வனவாசி, 3.30 மணிக்கு ஜலகண்டாபுரம், 4.30 மணிக்கு தாரமங்கலம், 5.30 மணிக்கு சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம், அஸ்தம்பட்டி மண்டலங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

