அரிசி ஆலை உரிமையாளர்களே அரிசியின் ஏகபோகத்துக்குக் காரணம் -டியூ குணசேகர

133 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள நான்கு அரிசி ஆலை உரிமையாளர்களால் நாட்டில் நிலவும் அரிசி ஏகபோ கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என முன்னாள் அமைச்சரான டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் உற்பத்தியாகும் நெல்லில் 46 வீதத்தை நான்கு பிரதான ஆலை உரிமையாளர்கள் எடுத்துக்கொள்வதாகவும் அதன் பின்னரே நாட்டில் அரிசியின் விலையை அவர்கள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த அநீதிக்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றும் அவர் கூறினார்.

இவ்வாறான நெருக்கடிகள் உள்ளடங்கலாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணம் நாட்டு மக்களுக்கு தெரியாது எனவும், இந்த நெருக்கடியின் உண்மை நிலையை மக்களுக்கு விளக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.