கடலூர் மாவட்டத்தில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் பேச்சை கேட்க 350 இடங்களில் சிறப்பு ஏற்பாடு

166 0

மு.க.ஸ்டாலினின் கடந்த 2 நாள் காணொலி காட்சி பிரசாரத்தை லட்சக்கணக்கானோர் கேட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் முதல் காணொலி மூலம் பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

முதலில் அவர் கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடையே பேசி ஆதரவு திரட்டினார்.

நேற்று மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்ட தி.மு.க.வினர் மத்தியில் காணொலி காட்சியில் உரையாற்றினார். சுமார் 400 இடங்களில் பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இன்று (செவ்வாய்க்கிழமை) கடலூர் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலினின் காணொலி காட்சி பிரசாரம் நடைபெறுகிறது. இன்று 5.30 மணிக்கு தொடங்கி இந்த பிரசாரம் நடைபெற உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலினின் காணொலி காட்சி உரையை கேட்க 350 இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க திட்டமிடப்பட்டு தொண்டர்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.

பெரிய திரை மூலம் ஸ்டாலினின் உரை காண்பிக்கப்படும். நேரில் சென்று பிரசாரம் செய்வதை விட காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்யும்போது அது பல ஆயிரம் பேரை சென்றடைகிறது.

மு.க.ஸ்டாலினின் கடந்த 2 நாள் காணொலி காட்சி பிரசாரத்தை லட்சக்கணக்கானோர் கேட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.