மின் வெட்டு தொடர்பில் நாளை முக்கிய தீர்மானம்

242 0

மின் பாவனைக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில்  தேவைக்கமைய மின் விநியோகத்தை துண்டிப்பது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படவுள்ளது.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த தகவலை கூறினார்.

மின்னுற்பத்திக்கும்,தேசிய மின்விநியோகத்திற்கும் இடையில் 300 மெகாவாட் இடைவெளி காணப்படுகிறது. இந்நிலைமையை சீர்செய்ய மின்சாரத்துறை அமைச்சு உரிய நடவடிக்கையினை இதுவரையில் மேற்கொள்ளவில்லை என வலுசக்தி துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை இன்று வரை தொடர்ச்சியாக விநியோகிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்தது.

வலுசக்தி அமைச்சின் கடமைகளுக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதில் மீண்டும் சிக்கல் நிலைமை தோற்றம் பெற்றுள்ளதாக வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த காலத்தை காட்டிலும் தற்போது மின்பாவனைக்கான கேள்வி அதிகரித்துள்ளத. 2750 மெகாவாட் மின்பாவனைக்கான கேள்வி அதிகரிக்கப்படுமாயின் மின்விநியோகத்தை துண்டிக்க நேரிடும். இவ்விடயம் குறித்து நாளை மின்சார சபையின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என்றார்.