ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸில் இன்றும் மாபியா – அமைச்சர் கபீர் ஹாஸிம்

281 0

kabeer4ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் வானூர்தி சேவை நிறுவனம் உள்ளிட்ட அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் கடந்த காலத்தில் செயற்பட்ட மாபியா இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஸிம் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஏ 350 900 ரக வானூர்திகள் நான்கை கொள்வனவு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த விமானம் ஒன்றின் அப்போதைய சந்தைப் பெறுமதி 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாகும்.

ஆனால், 1.4 மில்லியன் டொலர் ரூபாவுக்கு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்ய கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இந்த நான்கு வானூர்திகளையும் கொள்வனவு செய்தால் 4 ஆயிரத்து 320 கோடி ரூபா நட்டம் நாட்டுக்கு ஏற்படும்.

எனவே, இந்த உடனபடிக்கையை இரத்துச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் கபீர் ஹாஸிம் தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் வானூர்தி நிறுவனத்தில் செயற்படும் மாபியாவை ஒழிக்க முடியாமை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற அடிப்படையில் தாம் கவலையடைவதாகவும் கபீர் ஹாஸிம் தெரிவித்துள்ளார்.