ரயிலில் இருந்து விழுந்த யுவதி -காப்பாற்ற குதித்தஇளைஞன்

291 0

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயிலில் பிரான்ஸ் நாட்டு இளம் ஜோடி ஒன்று பயணித்த நிலையில் குறித்த யுவதி திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

இது ஓஹிய மற்றும் இந்தல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர்கள் இருவரும் ரயிலின் நடைமேடையில் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஓடும் ரயிலில் இருந்து திடீரென விழுந்த காதலியை காப்பாற்ற காதலனும் ரயிலில் இருந்து குதித்துள்ளார்.

அப்போது ரயிலில் இருந்த மற்ற பயணிகள் அவசர மணியை ஒலிரச் செய்து ரயிலை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த விபத்தில் குறித்த இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.